Automobile

சீன EV கார்களுக்கு உலகம் முழுவதும் அதிகரிக்கும் வரவேற்பு: மாறுகிறதா உலக ஆட்டோமொபைல் சந்தை?

சீன EV கார்களின் உலகளாவிய ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், உலக கார் சந்தையில் உருவாகி வரும் புதிய மாற்றங்கள் மற்றும் போட்டி குறித்து பார்க்கலாம்.

Tamilxa News Desk
Aug 10, 2026
2 Min Read
சீன EV கார்களுக்கு உலகம் முழுவதும் அதிகரிக்கும் வரவேற்பு: மாறுகிறதா உலக ஆட்டோமொபைல் சந்தை?

சீன EV கார்களுக்கு உலகம் முழுவதும் அதிகரிக்கும் வரவேற்பு: மாறுகிறதா உலக ஆட்டோமொபைல் சந்தை?

உலக ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் போட்டி தினம் தினம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மாற்றத்தால் தற்போது சீனாவைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனங்கள் அதிவேகமாக முன்னேறி வருகின்றன.

2026ஆம் வருடத்தின் முதல் பாதியில் சீன EV தயாரிப்பாளர்களின் வெளிநாட்டு ஏற்றுமதி 120 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சீன கார் நிறுவனங்கள் தங்களது உள்நாட்டு சந்தையைத் தாண்டி உலகத்தின் பல்வேறு நாடுகளில் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

உலகளவில் அதிகரிக்கும் EV தேவை

சீன EV நிறுவனத்தோட வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக உலகின் சில பகுதிகளில் எரிபொருள் விலை உயர்வு, மின்சார வாகனங்களுக்கான அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத்தொகைகள் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் EV மாடல்கள் ஆகியவை வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பிரேசில், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் வியட்நாம் போன்ற சந்தைகளில் மின்சார வாகனங்களுக்கான விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

இதனால் சீனாவில் தயாரிக்கப்படும் EV கார்களுக்கு வெளிநாடுகளில் புதிய சந்தைகள் உருவாகி வருகின்றன.

உலக சந்தையில் BYD உள்ளிட்ட சீன நிறுவனங்கள்

BYD, Chery, SAIC, XPeng, Leapmotor உள்ளிட்ட சீன நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் தங்களது விற்பனையை ரொம்பவே விரிவுபடுத்தி வருகின்றன.

குறிப்பாக BYD போன்ற நிறுவனங்கள் விலை, தொழில்நுட்பம் மற்றும் அதிக அம்சங்கள் கொண்ட மாடல்கள் மூலம் பாரம்பரிய கார் நிறுவனங்களுக்கு போட்டியை அதிகரித்து வருகின்றன.

சீன நிறுவனங்களின் முக்கிய பலமாக குறைந்த உற்பத்திச் செலவு மட்டுமல்லாமல், battery technology மற்றும் EV supply chain மீது சீனாவுக்கு இருக்கும் வலுவான கட்டுப்பாடும் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவிலும் அதிகரிக்கும் சீன EV பங்கு

சீன EV நிறுவனங்களின் வளர்ச்சி ஐரோப்பிய சந்தையிலும் தெளிவாகத் தெரிகிறது.

2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களில் சீன பிராண்டுகளின் பங்கு 14.2 சதவீதம் உயரத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

BYD, Chery, SAIC மற்றும் XPeng போன்ற நிறுவனங்கள் ஐரோப்பிய மார்க்கெட்டில் தங்களது இருப்பை வலுப்படுத்தி வருகின்றன.

ஆனால் சீன EV நிறுவனங்களுக்கு ஐரோப்பாவில் முழுமையான சுதந்திரமான சந்தை கிடைக்கவில்லை. சீனாவில் தயாரிக்கப்படும் சில EV கார்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் வரிகளை போட்டுள்ளது.. இதனால் நிறுவனங்கள் plug-in hybrid மற்றும் உள்ளூர் உற்பத்தி செய்வது போன்ற மாற்று வழிகளையும் கவனித்து வருகின்றன.

பாரம்பரிய கார் நிறுவனங்களுக்கு புதிய சவால்

இந்த வளர்ச்சி Toyota, Volkswagen, BMW, Mercedes-Benz போன்ற பாரம்பரிய கார் தயாரிப்பாளர்களுக்கும் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட கார்கள் கிடைக்குமா என எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பழைய கார் நிறுவனங்கள் EV டெக்னாலஜி, பேட்டரி விலை மற்றும் சாஃப்ட்வேர் அம்சங்கள் ஆகியவற்றில் தங்களது போட்டித்திறனை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அடுத்தது என்ன?

உலகளவில் EV adoption தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சீன கார் நிறுவனங்களின் வெளிநாட்டு விரிவாக்கமும் வேகமெடுத்து வருகிறது.

2026ஆம் ஆண்டில் உலகளவில் விற்பனையாகும் புதிய கார்களில் சுமார் 29 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இதனால் எதிர்கால ஆட்டோமொபைல் சந்தையில் போட்டி என்பது engine performance-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது. என்று தோன்றுகிறது.

பேட்டரி ரேச்ஞ், சார்றிங் ஸ்பீடு, சாஃப்ட்வேர், artificial intelligence, விலை மற்றும் smart features ஆகியவையும் ஒரு காரை வாங்கும் முடிவில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.

சீன EV நிறுவனங்களின் தற்போதைய வேகத்தைப் பார்க்கும்போது, உலக கார் சந்தையின் போட்டி சமநிலை மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான முக்கிய மிகப்பெரிய அறிகுறியாக இந்த வளர்ச்சி பார்க்கப்படுகிறது.


Share
J

Staff writer and contributor at Tamilxa. Passionate about delivering the latest stories and analytical coverage.

பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்